Wednesday, 8 March 2017

Red Card Soon in Cricket Also.!

வந்துவிட்டது கிரிக்கெட்டிலும் 'ரெட் கார்ட்'

கிரிக்கெட் விளையாட்டு வீரர்களிடேயே அவ்வப்போது சண்டைகள், கோபங்கள், ஆக்ரோஷ தருணங்கள் வருவதுண்டு. விளையாட்டின் மேல் உள்ள அதீத ஆர்வம் காரணமாக சில நேரங்களில் அப்படி நடந்து விடுகிறது.

இது பல சர்ச்சைகைகளை உண்டாக்குவதால் சம்மந்தப்பட்ட வீரருக்கு தன் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு அபராதம் விதித்து எச்சரிக்கும் ஐ.சி.சி. இருந்தும், புதிதாக எம்.சி.சி கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) வகுத்துள்ள சட்டத்தின் கீழ், மோசமான நடத்தையில் ஈடுபடும் கிரிக்கெட் வீரர்களை ஆட்டத்தை விட்டு வெளியே அனுப்பும் அதிகாரம் நடுவர்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டியிலும் 'ரெட் கார்டு' சிக்கிரமே அறிமுகமாக உள்ளது.

லண்டனில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப்பின் உலக கிரிக்கெட் கமிட்டிதான் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள், பரிந்துரைகளை ஆய்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவிக்கும். அது முதன்மை கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்படும். அதனை முதன்மை கமிட்டி ஏற்றுகொண்டால் அந்த பரிந்துரைகள், விதிமுறைகள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அமலுக்கு வரும். கடந்த டிசம்பர் மாதம், மும்பையில் நடந்த கூட்டத்திற்குப் பிறகு, சில புதிய சட்டங்களை, விதிமுறைகளையும் எம்.சி.சி. கிரிக்கெட் கிளப் பரிந்துரைத்தது. மேலும், போட்டின் அளவிற்கான கட்டுப்பாடுகளையும், ரன் அவுட் விதியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தையும் எம்.சி.சி வெளியிட்டுள்ளது.

'கிரிக்கெட் வீரர்களின் மோசமான நடத்தைக்கு எதிரான கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த சரியான நேரம் இது. அடிமட்ட அளவில் வீரர்களின் மோசமான நடத்தையால் பல நடுவர்கள் கிரிக்கெட் விளையாட்டை விட்டு விலகுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற கடுமையான விதிகள் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்' என்று எம்.சி.சி யின் கிரிக்கெட் தலைவர் ஜான் ஸ்டீபன்சன் கூறினார்.

இந்த புதிய விதிமுறைகள் இவ்வாண்டு அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய விதிகளில், கிரிக்கெட் பேட்டின் அதிகபட்ச அளவுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பேட்டின் அகலம் 108 மி.மீ, ஆழம் 67 மி.மீ மற்றும் முனைகள் 40 மி.மீ.க்கு மேல் இருக்கக் கூடாது என்றும் அந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக, இந்த விதி அமலுக்கு வரும் பட்சத்தில், ஆக்ரோஷமான வீரர்கள் தங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொண்டு, பொறுமையை கையாள வேண்டிய தருணம் இன்னும் அதிக தூரத்தில் இல்லை. கன்ட்ரோல்ல்ல்ல்ல்.!

~நன்றி

Sunday, 18 December 2016

Temples

Ancient Lord Shiva Temples in India


1. Lord Nataraja Temple (Chidambaram):


This is one of the Temple for Five Devils (Sky).



2. Lord Bragadeeshwara Temple (Tanjore):

This is an ancient Temple in Tamil Nadu built by the Great King Raja Raja Cholan (ராஜராஜ சோழன்).



3. Lord Murudeshwara Temple (Karnataka):

This is one of the most famous Temple of Lord Shiva located in Uttara Kannada District in Karnataka.